காஸ் சிலிண்டர் மற்றும் வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதில் 8 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பலி! -மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த துயரம்!

Restaurant-Gas-Blast-90 peoples Kills.jpga Restaurant-Gas-Blast-90 peoples Kills

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபுவா மாவட்டம், பெடல்வாட் நகரில், 12.09.2015 காலை 8.30 மணி அளவில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஸ் நிலையம் அருகே உணவு விடுதி ஒன்றில் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அதையொட்டிய கட்டிடத்தில் இருந்த வெடிமருந்துகள் தீப்பிடித்து வெடித்துச் சிதறின. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

3மாடி கட்டிடத்தை ஒட்டி அமைந்திருந்த உணவு விடுதியில் முதலில் காஸ் சிலிண்டர் வெடித்தது. அதைத்தொடர்ந்து ராஜேந்திர கேசவா என்பவர் வெடிபொருட்கள் இருப்பு வைத்திருந்த கட்டிடத்துக்கு தீ பரவி அடுத்ததாக இன்னொரு விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வெடி மருந்து வைக்கப்பட்டிருந்த கட்டிடமும், அதை ஒட்டிய உணவு விடுதியும் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின. மேலும் அக்கம்பக்கத்து கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்தன. ஏராளமான உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களும் தீப்பற்றி நாசம் அடைந்தன.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.

mp cm

இந்த சம்பவம் பற்றி மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ 2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளார். விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

narendra-modi-

nm

மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ்.

மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ்.

mpgov

இந்த துயர சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி, மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

– எஸ்.சதிஸ் சர்மா.