விநாயகர் சதூர்தியில் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து ஏற்காடு காவல் நிலையத்தில் பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் பொதுமக்களிடம் விநாயகர் சிலைகள் வைக்குமிடங்களுக்கு ஆஸ்பெட்டாஷ் சீட் அல்லது தகரங்ளை கொண்டுதான் கூரை அமைக்க வேண்டும், அங்கு கூம்பு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது, சிலை வைத்த 3 நாட்கள் கழித்து சிலைகளை கரைக்க வேண்டும், களி மண்ணால் செய்யப்பட்ட கெமிக்கல் கலக்காத சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், மேலும், 5 அடி உயர சிலைகளை மட்டுமே வைத்து வழிபட வேண்டும் என, ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் ஏற்காடு உதவி ஆய்வாளர் சின்னப்பன் மற்றும் ஏற்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-நவீன் குமார்.