தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை பாராட்டி, இலங்கை யாழ்ப்பாணம், மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று 16.09.2015 அன்று. தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம், தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏக மனதாக நிறைவேறியது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில், இலங்கை யாழ்ப்பாணம், மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
-வினித்.