சேலம் மாவட்டம், ஏற்காடு டவுண் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 22 சிலைகள் ஏற்காடு படகு இல்ல ஏரிக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீரில் கரைக்கப்பட்டது.
இதை திரளான பக்தர்கள் சுற்றி நின்று கண்டு வணங்கினர். ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
-நவீன் குமார்.