அசாம் மாநில அரசின் கிராமப்புற சுகாதார மையத்தில் லில்லி பேகம் லாஸ்கர் என்ற பெண் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
அசாம் மாநில பெண்கள், பாதுகாப்பாக குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அசாம் அரசு ரூ.500 உதவித் தொகை அளிக்கிறது.
இத்தொகையை கொள்ளையடிக்க நினைத்த லில்லி பேகம், தனது பெயரில், கடந்த 6 மாதத்தில் 85 குழந்தை பெற்றதாக அரசுக்கு போலியான பட்டியலை அளித்து ரூ.40 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.
இது பற்றி அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது, இதனை அடுத்து லில்லி பேகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.