பைக் மீது கார் மோதியதில் வாலிபர் காயம்!

??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????????????????????????????????????

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், தோளுர்பட்டி கைகாட்டி அருகே, இன்று (22.09.2015) மாலை 6.45 மணியளவில், திருச்சி- நாமக்கல் செல்லும் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது பின்னால் சென்ற ஓம்னி கார் மோதி விபத்து ஏற்பட்டது.

பைக் ஓட்டி வந்த வாலிபருக்கு தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டது. அதிஷ்ட்ட வசமாக உயிர் தப்பினார்.

இதைக் கண்ட கார் ஓட்டுனர், உடனே தலைமறைவாகி விட்டார். கார் ஓட்டுனர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகவும், பைக்கை ஓட்டி வந்த வாலிபர் பெயர் வினோத் எனவும் தெரிகிறது.

-பு.மோகன் ராஜ்.