இலங்கை அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய நகரில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மாற்று திறனாளி (ஒரு கால் இழந்தவர்) ஒருவரை இலங்கை போக்குவரத்து காவல்துறையினர் மனிதாபிமானமின்றி தரையில் போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
ஒரு மோட்டார் சைக்கிளில் கஹட்டகஸ்திகிலிய நகருக்கு வந்த மாற்று திறனாளியை மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு இரண்டு போக்குவரத்து காவலர்கள் மறித்துள்ளனர்.
போக்குவரத்து காவலர்கள் கட்டளை மீறி சென்றதால் இந்த நபரை நகரின் பிரதான பேருந்து நிறுத்தத்தில் பிடித்து போக்குவரத்து காவலர்கள் தாக்கியுள்ளனர். அப்போது இந்த நபர் பொருத்தியிருந்த செயற்கை கால் கழன்று விழுந்துள்ளது.
மாற்று திறனாளியை காவல்துறையினர் தாக்கும் போது நகரில் இருந்த பெரும்பாலான மக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
-வினித்.