ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்! கொலை நகரமாக மாறிவரும் தலைநகரம்! -மக்கள் கொந்தளிப்பு!

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தை.

 பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகள்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகள்.

admit for baby in hospitalNangloi in delhi

delhi-rape.jpg1

டெல்லி மேற்கு பகுதியில் உள்ள நங்லோய் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு ராம்லீலா விழா நடந்தது. அதை ஒரு பெண் தனது இரண்டரை வயது மகளுடன் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, அந்த நள்ளிரவு நேரத்தில் அந்தப் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அதை பயன்படுத்தி அந்த இரண்டரை வயது சிறுமியை மர்ம மனிதர்கள் கடத்திச் சென்று விட்டனர். மின்சாரம் வந்த பின்னரே சிறுமி கடத்தப்பட்டது தாய்க்கு தெரிய வந்தது. போலீசார் இதுபற்றி விசாரித்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் அந்த சிறுமியை தூக்கிச் சென்றது தெரிந்தது. 

இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த சிறுமி அருகாமையில் உள்ள ஒரு பூங்காவில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவள் உடம்பில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறி இருந்தது.

அவளை உடனடியாக சஞ்சய்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அந்த சிறுமி இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களால் கற்பழிக்கப்பட்டிருப்பதாக கூறினார்கள்.

அந்த சிறுமியின் உடலில் பல இடங்களில் காயமும் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மருத்துவமனைக்கு சென்று அந்த சிறுமியை பார்த்தார். பிறகு அவர் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் அந்த சிறுமியின் நிலை பரிதாபமாக இருப்பதாக கூறியுள்ளார்.

டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி.

டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி.

WCD

இதற்கிடையே, டெல்லி கிழக்கு பகுதியில் ஆனந்த விகார் என்ற இடத்தில் 5 வயது சிறுமி நேற்றிரவு கடத்தி கற்பழிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் கடத்தி சென்றுள்ளார்.

பிறகு அவளை சிலர் கும்பலாக சேர்ந்து கற்பழித்துள்ளனர். அந்த சிறுமியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கற்பழிக்கப்பட்ட சிறுமிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்ற டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்.

DELHI CM

முன்னதாக, இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சிறுமிகள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு வருவது வெட்கக்கேடாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது. டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்குவதில் முழுமையாக தவறிவிட்டனர். பிரதமரும் அவரது துணைநிலை கவர்னரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓராண்டுக்கு போலீஸ் துறையை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் கொடுங்கள். அதன் பிறகும் இந்த நிலைமை மாறாவிட்டால், நீங்களே திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

யூனியன் பிரதேசமாக இருக்கும் டெல்லியில் போலீஸ்துறை சார்ந்த அனைத்து அதிகாரங்களும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

-எஸ்.சதிஸ் சர்மா.