புற்று நோயினால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி என அழைக்கப்படும் சிவகாமினியின் பூதவுடல் கிளிநொச்சி சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த மூத்த போராளியும், விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப்பொறுப்பாளருமான தமிழினியின் இறுதி நிகழ்வுகள், நாளை கிளிநொச்சி சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நண்பகல் 11.30 மணிக்கு நடைபெற இருக்கின்றது.
இறுதி ஆராதனைகள் இறுதி வணக்க உரைகள் இடம்பெற்று தமிழினியின் புகழுடல் கோரக்கன்கட்டு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருக்கின்றது.
இந்நிலையில் இன்று காலை முதல் மக்கள், அரசியல் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், தமிழினிக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-வினித்.