இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் பதவியில் இருந்தபோது, ஆபத்து காலத்தில் தலைமறைவாக வாழ்வதற்கும், எதிரிகளிடம் இருந்து தப்பித்து கொள்வதற்கும், பாதாளச் சுரங்கத்திற்குள் அதிநவீன சொகுசு பங்களா ஒன்றை அமைத்துள்ளார்.
அந்த பாதாளச் சுரங்க பங்களாவிற்குள் உள்ளே நுழைவதற்கு ரகசியக் குறியீடுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அத்துடன் உள்ளே இருந்து கதவை மூடிக் கொண்டால், வெளியில் இருந்து ரகசியக் குறியீட்டின் மூலம் கூட திறக்க முடியாதளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், ஏ.சி., தொலைபேசி, இன்டர்நெட், அகலத்திரை தொலைக்காட்சிகள், சொகுசு இருக்கைகள், நிலமட்டத்திற்கு மேலே ஜனாதிபதி மாளிகையை முழுவதும் நடப்பவற்றை கண்காணிப்பதற்கான கேமராக்கள் என கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு நவீன மற்றும் சொகுசு வசதிகள் இந்த மாளிகைக்குள் உள்ளடக்கியுள்ளன.
மாளிகையின் மேற்புறம் நில மட்டத்திற்கு மேலாக இரண்டு அறைகள் கொண்ட ஓய்வு விடுதியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த பாதாளப் பங்களாவின் ரகசியங்கள் அனைத்தும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
-வினித்.