புதிய தார் சாலை அமைக்கும் பணியினை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்!

ye2410P1

ye2410P2

ஏற்காடு ஊராட்சிக்குட்பட்ட கோவில்மேடு கிராமத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டூர் கிராமத்திற்கு ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

இன்று இந்த பணியை திட்ட இயக்குனர் கவிதா நேரடி ஆய்வு செய்தார். அமைக்கப்பட்டு வரும் தார் சாலையின் தார் உள்ளிட்ட மூலப்பொருட்களின் அளவு அளக்கப்பட்டது. மேலும், ஒண்டிக்கடை பகுதியில் இருந்து கிளியூர் கிராமத்திற்கு செல்லும் சாலையை ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணியை ஆய்வு செய்தார்.

பின்னர், ஏற்காடு மற்றும் வாழவந்தி ஆகிய ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் சேவை மைய கட்டிடங்களையும் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது, உதவி பொறியாளர் தண்டபாணி, உதவி செயற்பொறியாளர் சரவணன், கிராம பஞ்சாயத்து பி.டி.ஓ.ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.  

     -நவீன் குமார்.