திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், புலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டாம்பட்டி அருகே, இன்று மாலை 3 மணியளவில், இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில், திண்ணனூரை சேர்ந்த பிரபு என்பவருக்கும், கெண்டையம்பட்டியை சேர்ந்த பாலக்குமார் என்பவருக்கும் பலத்தக்காயம் ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து புலிவலம் காவல்நிலைய ஆய்வாளர் மோகன்ராம் தலைமையிலான போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-எம்.சசிக்குமார்.