ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையினால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்தது. அவ்வாறு மழையால் இடிந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு வருவாய் துறையின் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டது.
இவ்வகையில் இன்று ஏற்காடு, குண்டூர் கிராமத்தை சேர்ந்த ஆண்டி, வெள்ளையன், வெங்கடாசலம், கரியமலை மற்றும் ஏற்காடு டவுண் பகுதியை சேர்ந்த பாக்கியம் ஆகியோருக்கு ரூ.4ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், பட்டிப்பாடி, கொண்டையனூர் கிராமத்தை சேர்ந்த கரியராமன் என்பவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
மழையினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 10 கிலோர அரிசி, 1 லிட்டர் மண்ணென்னை, 1 கிலோ சர்க்கரை ஆகியவற்றை ஏற்காடு வட்டாட்சியர் பாலாஜி வழங்கினார். அப்போது, ஏற்காடு வருவாய் ஆய்வாளர் கணேசன், ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.
-நவீன் குமார்.