இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சரத் டி ஆப்ரு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் டி ஆப்ரு.

இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் டி ஆப்ரு.

Supreme Court Judge Sarath de Abrew with mhinda

கடந்த ஜுன் மாதம் தமது வீட்டில் பணிசெய்த பெண்ணை கைத்துப்பாக்கியின் மூலம் அச்சுறுத்தி தாக்கினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் டி ஆப்ரு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பெண் அளித்த சாட்சியத்தின்படி நீதிபதி சரத் டி ஆப்ரு பல சந்தர்ப்பங்களில் தம்மை தாக்கியதாகவும், கைதியை போல தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

நீதிபதி சரத் டி ஆப்ரு கடந்த ஜுன் மாதம் 26-ந்தேதி Mt-Lavinia Magistrate’s Court-ல் சரண்டர் ஆன போது.

நீதிபதி சரத் டி ஆப்ரு கடந்த ஜுன் மாதம் 26-ந்தேதி Mt-Lavinia Magistrate’s Court-ல் சரண்டர் ஆன போது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை போலிஸார் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் நீதிபதி சரத் டி ஆப்ரு கடந்த ஜுன் மாதம் 26-ந்தேதி Mt-Lavinia Magistrate’s Court-ல் சரண்டர் ஆகி ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நீதிபதி சரத் டி ஆப்ரு பதவி விலகவேண்டும் என்று வழக்கறிஞர்கள் (சட்டத்தரணிகள்) கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து நீதிபதி சரத் டி ஆப்ரு தனது பதவி விலகல் கடிதத்தை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு எதிராக தீர்ப்புச்  சொல்ல வேண்டிய ஒரு  நீதிபதி!  குற்றவாளியாக  கோர்ட்டில் நிற்கும் அவலம், இலங்கை நீதித்துறையில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-வினித்.