தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் நிவாரணம், வெள்ள சீரமைப்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட உடனடியாக மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா விரிவான கடிதம் ஒன்றை இன்று (23.11.2015) காலை அனுப்பியிருந்தார்.
அதன் அடிப்படையில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் நரேந்திர மோதி தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதிக்கு முதற்கட்டமாக ரூ.939.63 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், மத்திய அரசின் குழு வெள்ள சேதங்களை பார்வையிட்ட பிறகு, கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com