திருச்சியில் இருந்து சர்க்கார்பாளையம், கீழமுல்லக்குடி மார்க்கமாக… கல்லணை வரை செல்லும் சாலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்தார்கள்.
ஆனால், சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்கவில்லை. இதனால், கீழமுல்லக்குடி பேருந்து நிறுத்திற்கு மேற்கே பெரும்பாலான மின் கம்பங்கள் சாலையிலேயே நிற்கிறது.
இதனால், அச்சாலையில் வந்து செல்லும் வாகனங்கள் மின் கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகின்றன. மேலும், கல்லணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும், இந்த வழியாகதான் அதிகளவில் வந்து செல்லுகின்றனர். புதிதாக வரும் சுற்றுலா வாகனங்களுக்கு, இந்த மின் கம்பங்கள் அச்சுறுத்தலாக இருக்கிறது.
அதே போல், இதே சாலையில் புத்தாபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு கிழக்கே, OFT பம்பு ஹவுஸ்க்கு இடைப்பட்ட பகுதியில் ஆபத்தான ஒரு வளைவு இருக்கிறது. அந்த இடத்தில் ஆங்காங்கே சாலைச்சேதமடைந்து இருக்கிறது. இதனால், இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள், தினந்தோரும் சருக்கி விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர்.
இது சம்மந்தமாக, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, போர்கால அடிப்படையில் மேற்படி பிரச்சனைகளை சரிசெய்யவில்லையென்றால், அச்சாலையில் செல்லும் வாகனங்கள் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.