கருத்து கணிப்பா? கருத்து திணிப்பா? வதந்திகளைச் செய்திகளாக்கி வருமானம் பார்ப்பதும், ஆபாசம் மற்றும் பொய்களை விற்றுப் பிழைப்பு நடத்துவதும் விகடன் குழுமத்திற்கு வாடிக்கை!

398682-av

மூத்த பத்திரிகையாளரும், பதிப்பாளரும் மற்றும் விகடன் குழுமத்தின் தலைவருமான பாலசுப்ரமணியன் விகடன் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் இருந்த வரை,  இதழியல் தர்மத்தை தன் இரு கண்ணாக  கருதி காப்பாற்றி வந்தார்.

அவரது மகன் பா.சீனிவாசன் தலையெடுத்தப் பிறகு, அவரது குடும்ப அளவில் மட்டுமல்ல, விகடன் குழுமத்தின் நிர்வாக அளவிலும் மற்றும் கொள்கை அளவிலும் பெரிய மாற்றங்கள் உருவாகியது.

அந்த மாற்றங்கள் அனைத்தும், பாலசுப்ரமணியன் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாகவே இருந்தது. அதனால், அந்த பாவங்களுக்கும், பழி சொல்லுக்கும், தான் காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காக, தன் இதழியல் பணியை பாலசுப்ரமணியன் குறைத்து கொண்டார் என்று சொல்வதை விட,  நிறுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். இது அவர் விரும்பி எடுத்த முடிவல்ல! வேறு வழியில்லாமல் எடுத்த முடிவு! அந்த ஏக்கத்திலேயேதான் அவர் இறந்தும் போனார்.

ஒரு ஊடக நிர்வாகம் எப்படி  இருக்க வேண்டும் என்பதற்கு பாலசுப்ரமணியனும், ஒரு ஊடக  நிர்வாகம் எப்படி  இருக்க கூடாது என்பதற்கு அவரது மகன் பா.சீனிவாசனும் மிக சிறந்த  உதாரணம்.

விகடன் நிர்வாகம் என்றைக்கு சாட்டிலைட் சேனலுக்கென ‘மெகா சீரியல்’ தயாரிப்பதற்காக “விகடன் டெலிவிஸ்டா” என்ற நிறுவனத்தைத் தொடங்கியதோ, அப்போதே விகடன் குழுமத்தின் நேர்மையும், நடுநிலையும் விலைபோய்விட்டது.

அன்று முதல் வதந்திகளைச் செய்திகளாக்கி வருமானம் பார்ப்பதும், ஆபாசம் மற்றும் பொய்களை விற்றுப் பிழைப்பு நடத்துவதும் விகடன் குழுமத்திற்கு வாடிக்கையாகிவிட்டது.

அவ்வப்போது சீசனுக்கு ஏற்றவாறு “கருத்துக் கணிப்பு,  மெகா சர்வே” என்று வெளியிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தி தனது தொழிலை லாபகரமாக விகடன் நிர்வாகம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஆனால், விகடன் இதழ்களின் எந்த கருத்துக் கணிப்பும், மெகா சர்வேக்களும் உண்மையாக இருந்ததுமில்லை, அது உறுதியாக நடந்ததுமில்லை. அப்படியானால் யாருடைய சந்தோசத்திற்காக, யாருடைய விருப்பத்திற்காக இதை செய்கிறார்கள்? அந்த சீனிவாசனுக்குதான் வெளிச்சம்.

JV

இந்நிலையில் இன்று (28.11.2015) வெளிவந்துள்ள “ஜீனியர் விகடன்” இதழில், தி.மு.க-வில் ஸ்டாலின், அ.தி.மு.க-வில் பன்னீர், அடுத்தது யார்? அதிருது தமிழகம்! என்ற தலைப்பில் ‘ஸ்பெஷல் சர்வே’ முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த முடிவுகளை ஆராய்வதற்கு முன்பு, கடந்த (2014) பாராளுமன்றத் தேர்தலில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதி முறைகளை மீறி, வாக்கு பதிவு நடைபெறுவதற்கு முன்தினம் அதாவது 23.04.2014 அன்று, 27.04.2014 தேதியிட்டு வெளிவந்த “ஜீனியர் விகடன்” இதழில், தேர்தல் கணிப்பு ஸ்பெஷல்! 40 தொகுதிகளின் ‘நச்’ நிலவரம்! என்ற தலைப்பில் வந்த தேர்தல் முடிவுகளை இங்கு பார்ப்போம்.

jv-before-election

அ.இ.அ.தி.மு.க : 15
தி.மு.க கூட்டணி : 14
பா.ஜ.க. கூட்டணி :11

அ.இ.அ.தி.மு.க வெற்றி பெறும் தொகுதிகள்:

1.திருவள்ளூர்

2. வட சென்னை.
3. தென் சென்னை
4. காஞ்சிபுரம்.
5. கிருஷ்ணகிரி
6. விழுப்புரம்
7. நாமக்கல்
8. திருப்பூர்
9. நீலகிரி
10. திருச்சி
11. கடலூர்
12. மயிலாடுதுறை
13. சிவகங்கை
14. மதுரை
15. தேனி.

தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள் :

1.மத்திய சென்னை

2. ஸ்ரீபெரும்புதூர்.
3.திருவண்ணாமலை
4. கள்ளக்குறிச்சி
5. தஞ்சை
6. சேலம்
7. திண்டுக்கல்
8. கரூர்
9. பெரம்பலூர்
10. நாகப்பட்டினம்
11. ராமநாதபுரம்
12. திருநெல்வேலி
13. சிதம்பரம்- விடுதலை சிறுத்தைகள்
14. தென்காசி- புதிய தமிழகம்

பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள்:

1.வேலூர்- பா.ஜ.க.

2. கோவை- பா.ஜ.க.
3. பொள்ளாச்சி- பா.ஜ.க.
4. கன்னியாகுமரி- பா.ஜ.க.
5. அரக்கோணம்- பா.ம.க.
6. தர்மபுரி- பா.ம.க.
7. ஆரணி- பா.ம.க.
8. ஈரோடு – ம.தி.மு.க
9. விருதுநகர்- ம.தி.மு.க
10. தூத்துக்குடி- ம.தி.மு.க
11. புதுவை- என்.ஆர்.காங்கிரஸ்

நாம் வெளியிடும் கருத்துக் கணிப்புகள், அடுத்த சில தினங்களில் வெளிவரப்போகும் அதிகாரப்பூர்வத் தேர்தல் முடிவுகளோடு, எந்த விதத்திலும் கொஞ்சம் கூட சம்மந்தமில்லாமல் இருக்குமேயானால், நம்மை பற்றியும், நம் பத்திரிகையைப் பற்றியும் மக்கள் என்ன நினைப்பார்கள்? ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதற்காக, மக்கள் நம் முகத்தில் காறி துப்ப மாட்டார்களா? என்ற கூச்சமோ, குற்ற உணர்வோ, பயமோ இல்லாமல் இவர்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டார்கள் என்றால், இவர்களுக்கு மற்றவர்களை பற்றி விமர்சனம் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? இதுதான் விகடன் குழுமத்தின் லட்சணம்.

அரசியலில் தனக்குதான் அதிகமான ஆதரவு இருப்பதாக ‘தினகரன்’ நாளிதழ் மூலம் கருத்துக்கணிப்பு வெளியிட வைத்து, மு.க.அழகிரி ஆதரவாளர்களால் 3 அப்பாவி ஊழியர்களை உயிரோடு எரித்து கொள்வதற்கு காரணமாக இருந்த மு.க.ஸ்டாலின்.

இப்போது திமுக-வில் முதல்வர் வேட்பாளராவதற்கு தனது தந்தை மு.கருணாநிதியை விட, தனக்குதான் அதிகமான ஆதரவு இருப்பதாக அறிவிப்பதற்கு விகடன் உதவியை மு.க.ஸ்டாலின் நாடியுள்ளார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

jv nov28.jpg1

jv nov28.jpg1.jpgb

இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் ஒப்பிட்டு அவர்களுக்குள் விரோதத்தை உருவாக்கி, இதன் மூலம் அ.தி.மு.க-வில் குழப்பத்தை ஏற்படுத்தவும் மு.க.ஸ்டாலின் முயற்சித்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில்  கலவரத்தை உருவாக்கி பொது அமைதிக்கு வேட்டு வைக்கும் முயற்சியில் விகடன் நிர்வாகம் இறங்கியுள்ளது.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com