ஏற்காடு டவுண் பகுதியில் உள்ள அலங்கார ஏரிக்கு அருகில் சுப்புராஜ் என்பவர் கட்டிடம் ஒன்று கட்டி வருகிறார். இந்த கட்டிடத்திற்கு அருகில் நீண்ட காலமாக மின் கம்பம் ஒன்று இருந்து வந்தது.
இந்த மின் கம்பம் கட்டிடம் கட்டும் பணிக்கு தொந்தரவாகவும், கட்டிட நுழைவு பகுதியில் இருப்பதாலும் அந்த மின் கம்பம் மின் வாரியத்தால் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
தற்போது மாற்றப்பட்டுள்ள மின் கம்பமானது அலங்கார ஏரியின் கரையாகும். இந்த இடத்தில் மழை பெய்யும்போது சாலையில் இருந்து தண்ணீர் ஏரிக்குள் செல்லும். இந்த இடம் மண் அரிப்பு ஏற்பட கூடிய இடமாகும். இதனால் மின் விபத்துகள் ஏற்படும் ஆபத்துள்ளது. பின்வரும் ஆபத்தை உணராமல் இந்த இடத்தில் மின் கம்பத்தை மாற்றியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஏற்காடு மின்வாரிய உதவி பொறியாளர் கூறியதாவது:
தனது கட்டிடத்திற்கு தொந்தரவாக மின் கம்பம் இருப்பதாக அந்த கட்டிட உரிமையாளரிடம் இருந்து மனு வந்தது. மேலும், அதற்கான கட்டணத்தையும் அவர் கட்டியுள்ளார். அதனால் அங்கிருந்த அந்த மின் கம்பத்தை எதிரில் உள்ள ஏரிக்கரைக்கு மாற்றியுள்ளோம் என்றார்.
-நவீன் குமார்.