உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ்யாதவுக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நன்றி கடிதம்!

jjDear Shri Akhilesh Yadav,

Akhilesh-Yadav

தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அதற்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உங்களது சிறப்பான பங்களிப்பாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து வழங்கியதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எனது தலைமையிலான தமிழக அரசு, தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் இயல்பு நிலையை கொண்டு வர தொடர்ந்து தீவிரமாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தங்களது சிறப்பான பங்களிப்புக்காக மீண்டும் ஒரு தடவை இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

 -ஆர்.மார்ஷல்.