மாணவர்களை மிதித்து துன்புறுத்தும் வீடியோ 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்றச் சம்பவம்! -ஜெசி மெட்ரிக்குலேசன் நிர்வாகம் தகவல்!

vlcsnap-2015-12-13-20h25m32s78

திருச்சி, புத்தூர், சாலைப்பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஜெசி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அப்பள்ளியின் மாணவர்களை மிதித்து துன்புறுத்தும் வீடியோ கடந்த 12- ந்தேதி முதல் சமூக ஊடகங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதை அடிப்படையாகக் கொண்டு தினசரி பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டன.

“எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் -அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு”

-என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கை வழிக்காட்டு நெறியாக கடைப்பிடித்து செயல்பட்டு வரும், நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஊடக ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின், இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து, பள்ளி நிர்வாகத்தின் கருத்தை அறிய வீடியோவை 13.12.2015  அன்று மின் அஞ்சல் மூலம் ஜெசி மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பியிருந்தார்.

email news

email news.png1

இந்த வீடியோ 4 ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டது என்றும், மீண்டும் பிரச்னையை உருவாக்க வேண்டும் என்பதற்காக மறுபடியும் பதிவேற்றம் செய்துள்ளார்கள் என்றும், ஜெசி மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகம் இன்று (14.12.2015) காலை மின் அஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

-கே.பி.சுகுமார்.