சேலம் மாவட்டம். ஏற்காட்டில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேலூர் கிராமம். இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குடும்ப அட்டைக்கான பொருட்களை பெறுவதற்கு மேலூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளக்கடை கிராமத்திற்கு செல்கின்றனர்.
ஆனால், இவர்களது கிராமத்தின் நடுவில் கடந்த 2010 ஆம் ஆண்டே நியாயவிலைக் கடை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டி ஐந்து ஆண்டுகள் ஆகியும் நியாய விலைக்கடை திறக்கப்படாததால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
நியாய விலைக்கடை இல்லாவிட்டாலும் பராவயில்லை, கடை இருந்தும் ரேஷன் பொருட்கள் வாங்க வெள்ளக்கடை கிராமத்திற்கு செல்வது சிரமமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
இது குறித்து ஏற்காடு வட்ட வழங்கல் அலுவலரிடம் விசாரித்தோம்:
இந்த மேலூரில் கடை கட்டி திறக்கப்படாதது குறித்து இது வரை எனக்கு தெரியாது. ஆனால், தாய் கடையில் இருந்து புது கடை துவங்க வேண்டுமெனில் கிராமத்தில் குறைந்தது 500 குடும்ப அட்டைகளாவது இருக்க வேண்டும். ஆனால், மேலூர் கிராமத்தில் 80 குடும்ப அட்டைகள்தான் இருக்கும். இருப்பினும் மேல் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
-நவீன் குமார்.