திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி வட்டம், திருச்சிராப்பள்ளி மாநராட்சி, வார்டு எண் 28, புதுத்தெரு, கணபதி நகர், அரியமங்கலம் (பழைய போலிஸ் ஸ்டேஷன் இருந்த இடத்திற்கு மிக அருகில்)திருச்சிராப்பள்ளி-620010 என்ற முகவரியில், தொழில் செய்வதற்கான எந்தவித பெயர் பலகையும் இல்லாமல், ஆபத்தான கழிவுப்பொருட்களை சேகரித்து கொண்டு வந்து, அங்குள்ள குடோனில் சேமித்து வைத்து, அதன் கழிவுகளை அங்கேயே அகற்றி வருகிறார்கள்.
இதனால், அப்பகுதி முழுவதும் துற்நாற்றம் வீசுவதோடு, ஆபத்தான அந்த நச்சுக்கழிவுகளின் துகள்கள், அருகில் இருக்கும் வீடுகளுக்குள் காற்றில் பறந்துப்படிகிறது. இதனால் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, உடுத்தும் ஆடை… ஆகியவை மாசு அடைந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதுக்குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் சார்பாக, திருச்சி துவாக்குடியில் உள்ள மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரிடமும், சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடமும் எழுத்துப்பூர்வமாகவும், புகைப்பட ஆதாரத்துடனும் பல முறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆபத்தான கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்தி, பொதுமக்களின் நலன் காக்க வேண்டிய அதிகாரிகள், கம்பெனி நிர்வாகத்திடம் தனிப்பட்ட முறையில் ஆதாயத்தைப் பெற்றுக் கொண்டு, புகார் தெரிவித்த பொதுமக்களை கம்பெனி நிர்வாகத்தினரிடம் காட்டிக் கொடுத்து வருகின்றனர். இதனால் புகார் கொடுப்பதற்கே பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தினால் மட்டும்தான் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com