திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் சா.வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆசிரியர் பயிற்றுனர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
மருத்துவர் கே.புனிதவதி கலந்து கொண்டு, பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் நில வேம்பு கசாயம் வழங்கி, பின்னர் மழைக்கால நேரங்களில் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும், தன் சுத்தம் பேணுதல், டெங்கு காயச்சல் தடுக்கும் விதம், பள்ளியில் சுகாதாரம் குறித்து விளக்கம் அளித்தார்.
பள்ளி ஆசிரியர்கள் த.சங்கீதா, கு.தனலெட்சுமி, பூ.ஜோதி, ரேகா, அமலிஜெரினா, மகேஸ்வரி, ஆறுமுகம், ராஜா மற்றும் மாணவர்கள் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் ஆசிரியர் ச.நாராயணன் நன்றி கூறினார்.
-செங்கம். மா.சரவணக்குமார்.