பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி! –படங்கள்.

nawaz-sharif-welcome-modi-in-lahore-pakistan

nawaz-sharif-welcome-modi-in-lahore-pakistan-a

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றப்போது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றப்போது.

ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி திரும்பும் வழியில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று (25.12.2015) மாலை பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். இவரது திடீர் பயணம் உலக நாடுகள் அனைத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

நரேந்திர மோதி இந்தியாவின் பிரதமராக இருக்கும்வரை, பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்காது என்று காங்கிரஸ் தரப்பில் பகிரங்கமாகவே ஒரு விமர்சனம் இருந்து வந்தது. 

நரேந்திர மோதியின் இந்த இரகசிய பயணம், அதை முறியடித்துள்ளது. இதனால், தற்போது காங்கிரஸ் எரிச்சல் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதியின் இந்த இரகசிய பயணத்திற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் எழும்  வாய்ப்பு உள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இதுவரை எத்தனையோ நாடுகளுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு இருந்தாலும், பாகிஸ்தானுக்கு இன்று சென்ற இந்த இரகசிய பயணம் தான், உலக தலைவர்களின் புருவங்களை உயர்த்த செய்துள்ளது.

இது நரேந்திர மோதியின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் என்றுதான் சொல்ல வேண்டும். நரேந்திர மோதியின் 19 மாத ஆட்சிகாலத்தில் நடந்த பயனுள்ள சம்பவம் எது என்றால், இதைதான் முதலில் பட்டியலிட வேண்டும்.

ஏனென்றால், இந்தியாவும், பாகிஸ்தானும் எந்த காலத்திலும் இணக்கமாக இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கும், இந்தியாவை உறவாடிக்கெடுக்க நினைக்கும் நாடுகளுக்கும், நரேந்திர மோதியின் இந்த இரகசிய பயணம் கொள்கையளவில் பாதிப்பை உருவாக்கும்.

‘எதிரி நாடு, எதிரி நாடு’ என்று சொல்லிக்கொண்டு இருப்பதைவிட, இதுப்போன்ற இன்ப அதிர்ச்சிகளை கொடுப்பதின் மூலமாவும், அடிக்கடி இருநாட்டுத் தலைவர்களும் நேருக்கு நேராக முகத்தைப் பார்த்து பேசுவதின் மூலமாகவும் எல்லையில் பதட்டத்தையும், இருநாட்டு மக்களின் மனதில் நம்பிக்கையையும், நிம்மதியையும் நிச்சயமாக உருவாக்க முடியும்.

‘பேசித் தீர்க்க முடியாத பிரச்சனையை பீரங்கியும், அணுகுண்டும் தீர்க்காது’ என்ற உண்மையை உலகத்திற்கு உணர்த்த வேண்டும்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

படங்கள்: சதிஸ்சர்மா.