பள்ளி நுளைவுவாயில் அருகே உள்ள குப்பைத் தொட்டி! -முகம் சுழிக்கும் மாணவர்கள்!

??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட காட்டூரில், அரசினர் ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளி உள்ளது.

அந்த பள்ளியின் நுளைவுவாயில் அருகே, திருச்சி மாநகராட்சியின் குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குப்பைத் தொட்டியில் சேரும் குப்பைகளை தினந்தோறும் அப்புறப்படுத்தாமல் நிரம்பி வழிகிறது. குப்பைத் தொட்டியில் இருந்து வரும் துற்நாற்றத்தால், பள்ளிக்கு வரும் மாணவர்களும், ஆசிரியர்களும் முகம் சுழிக்கின்றனர்.

எனவே, அந்த குப்பைத் தொட்டியை அங்கிருந்து அகற்றி சற்று தொலைவில் வைத்தால், அப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிம்மதியடைவார்கள்.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-M.அன்பரசன்.