டெல்லியில் காற்று மாசுபடுவதை குறைக்க, ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும், இரட்டை படை எண் கொண்ட வாகனங்கள் மறுநாளும், மாறி மாறி இயக்க புதிய கட்டுப்பாடு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இன்று சைக்கிளில் தனது அலுவலகத்திற்கு சென்றார்.
பிறருக்கு அறிவுரை கூறும் முன்னர், அதில் உள்ள இன்னல்களை தெரிந்துக்கொள்வதற்காகதான் சைக்கிளில் வந்தாக அவர் தெரிவித்தார்.
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் கார் ஒற்றைப்படை எண் கொண்டது என்பதால், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அந்த காரை இன்று இயக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
-எஸ்.சதிஸ்சர்மா.