ஏற்காடு பேருந்து நிலையத்தில் இன்று காலை வாழவந்தி கிராமத்திற்கு வர மறுக்கும் எம்.எஸ்.எம்.பி.என்ற தனியார் பேருந்தை வாழவந்தி, கீரைக்காடு மற்றும அதை சுற்றியுள்ள கிராம மக்கள் சிறை பிடித்தனர். இது போல ஏற்கெனவே இதே பேருந்தை இரு முறை சிறை பிடித்துள்ளனர்.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் ஹரி, கிராம மக்களை சமாதானம் செய்து பேருந்தை விடுவித்தார். கிராம மக்களை கலைந்து போகச்செய்தார்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே பயணம் செய்வதால் பெரும்பாலான நாட்களில் வாழவந்தி கிராமத்திற்கு இந்த பேருந்து வருவது கிடையாது. இது குறித்து ஆர்.டி.ஓ. நேரடி ஆய்வில் ஈடுப்பட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் இவ்வாறு கூறினர்.
-நவீன் குமார்.