ஏற்காட்டில் நடைப்பெற்ற 28 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில் யங்ஸ்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் பரிசை வென்றது!

ye1301P5

ஏற்காடு மாண்போர்ட் பள்ளி வளாகத்தில் கடந்த 8 ஆம் தேதி முதல் 6 நாட்களாக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டதுஇந்த போட்டியில் ஏற்காடு தாலுக்காவை சேர்ந்த 28 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெரீனாக்காடு கிராமத்தை சேர்ந்த யங்ஸ்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மஞ்சக்குட்டை அணியும் மோதியது.

இதில் யங்ஸ்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் .டி.பாலு, ஜெரீனாக்காடு பாலக்கிருஷ்ணன் ஆகியோர் கோப்பையையும், பரிசு தொகையையும் வழங்கினர்.    

 – நவீன் குமார்.