சேலம் மாவட்டம், ஏற்காடு, ஒண்டிக்கடை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக தாரை தப்பட்டையுடன் கூடிய நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. பின்னர் பொங்கல் செய்யப்பட்டது. அங்கிருந்த பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் பொங்கல் வழங்கினார்.
12 மணிக்கு அவசரம் அவசரமாக நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சம்பத் பொங்கல் வழங்கியவுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டு, 12.15 மணிக்கு புறப்பட்டு படகு இல்லத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில், ஏற்காடு யூனியன் சேர்மேன் அண்ணாதுரை, ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
– நவீன் குமார்.