இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வரும் 20-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கப்படுகிறது.
தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு சட்டமன்ற தொகுதி ஒன்றுக்கு ரூ.11,000. புதுச்சேரி ரூ.5,000. கேரளா ரூ.2,000. விருப்ப மனுவை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
–கே.பி.சுகுமார்.