ஏற்காட்டில் நடைப்பெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டம்!  

ye2601P1

ye2601P2

* ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் கிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலகர்கள், கிராம உதவியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 * ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் சேர்மேன் அண்ணாதுரை தேசிய கொடியை ஏற்றினார். யூனியன் துணை சேர்மேன் சுரேஷ்குமார், பி.டி.ஓ.க்கள் மயில்சாமி, ஜெயராமன் மற்றும் யூனியன் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 * ஏற்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முரளி தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 * ஏற்காடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் குமரன் தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் ஹரி மற்றும் ஏற்காடு காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

 * ஏற்காடு காந்தி பூங்காவில் ஏற்காடு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெய்ஆனந்த் தேசிய கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அந்தோணி சங்கர், பச்சயன், ராமர், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ye2601P3

 * ஏற்காடு, அசம்பூர் கிராமத்தில் அக்னி சிறகுகள் இளைஞர் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த விழாவில் மஞ்சக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அக்கிராம பள்ளி சிறுவர்களுக்கு சுப்பிரமணி மற்றும் ஜெய் ஆனந்த் ஆகியோர் நோட்டு புத்தகங்கள், உள்ளிட்ட படிப்பு சாதனங்களை வழங்கினர்.

???????????????????????????????

 * ஏற்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முரளி தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் இரண்டாம் கட்டமாக 100 தனிநபர் கழிப்பிடம் கட்டுதல், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பொதுமக்களிடம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 -நவீன் குமார்.