ஏற்காடு தாலுக்கா அரங்கம் கிராமத்தில் ரூ.15 இலட்சம் மதிப்பில் நியாவிலைக்கடை, குட்டமாத்திக்காடு மற்றும் கொம்புதூக்கி ஆகிய கிராமங்களில் ரூ.13 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடங்களையும், ஏற்காடு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ சரோஜா திறந்து வைத்தார்.
அப்போது அப்பகுதி மக்கள் கேளையூர் மற்றும் மாவுத்து கிராமங்களுக்கு தனி நியாவிலைக்கடை கோரியும், நார்த்தன்சேடு முதல் கொட்ச்சேடு வரை தார்சாலை அமைக்க கோரியும் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏற்காடு யூனியன் சேர்மேன் அண்ணாதுரை, துணை சேர்மேன் சுரேஷ்குமார், மாரமங்களம் கவுன்சிலர் வருதாயி ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-நவீன் குமார்.