கால்நடை பராமரிப்பு துறை மூலம் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி!  

ye0402P1

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், வாழவந்தி கிராமத்தில் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

ஏற்காடு வட்டார வேளாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வாழவந்தி கிராமத்தில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியில் வேளாண் உதவி இயக்குனர் பாரதிநாதன் தலைமையேற்று வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களையும், தொழில் நுட்ப விவரங்களையும் விவரித்தார்.

பயிற்றுனராக கலந்து கொண்ட ஏற்காடு கால்நடை மருத்துவர் தேவேந்திரன் வெள்ளாடு வளர்ப்பின் சிறப்பியல்புகள் மற்றும் ஆடுகளை தேர்ந்தெடுத்தல் முறைகளையும் விவரித்து பேசினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் கந்தசாமி அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், பரண்மேல் ஆடு வளர்க்கும் தொழில்நுட்பங்களையும் விவரித்தார்.

மேலும், வாழவந்தி கால்நடை மருத்துவர் முத்துகுமார் தீவண மேலாண்மை மற்றும் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் முறைகைள், வெள்ளாடு நோய் பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கினார்.

இப்பயிற்சியில் அரங்கம், பெலாக்காடு, புளியங்கடை, கொட்டச்சேடு, மாரமங்களம், மற்றும் வாழவந்தி ஆகிய பகுதிகளை சேர்ந்த வெள்ளாடு வளர்க்கும் விவசாயிகள் 50-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வாழவந்தி கால்நடை மருத்துவர் முத்துகுமார் செய்திருந்தார்.

 -நவீன் குமார்.