கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்செய்ய, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு!

pr040216f


SUPREME COURTSUPREME COURT2

கெயில் நிறுவனத்தின் வழக்கு விபரம்.

கெயில் நிறுவனத்தின் வழக்கு விபரம்.

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்செய்ய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். 

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த திட்டத்தை தமிழகம் வழியாக செயல்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.

இத்திட்டம் தமிழகத்துக்கு பயன் அளிக்கும், சுற்றுச்சூழலுக்கு எந்தவகையிலும் பாதிப்பு இல்லை. எனவே, எரிவாயு குழாய்களை பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. 

இவ்விவகாரத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அனுமதி வழங்கியதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

இந்நிலையில் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்செய்ய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (04.02.2016) அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது வழக்கில் எடுத்துரைக்கப்பட வேண்டிய விபரங்கள் குறித்து முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, அமைச்சர்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர், சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com