தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க.வின் தொண்டர்களும், நிர்வாகிகளும் கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 68 கிலோ கேக் வெட்டி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.
கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கி ஏழைகளுக்கு மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
பிரதமர் நரேந்திர மோதி, தமிழக ஆளுநர் ரோசய்யா உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-கே.பி.சுகுமார், எஸ்.திவ்யா.