ஒரு ரோஜாவில் 7 ரோஜா மொட்டுக்கள்!

??????????

ஏற்காட்டில் ஒரு மலர்ந்த ரோஜாவின் மையப் பகுதியில் 7 மொட்டுக்கள் உருவாகியிருக்கிறது.

ஏற்காட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை என்பவரின் வீட்டில்  மலர்ந்த ரோஜாவின் மையப் பகுதியில் மொட்டுக்கள் உருவாகியிருக்கிறதுஇவ்வாறு அரிதாக மலர்ந்துள்ள பூவினை அப்பகுதியில் உள்ள மக்கள் கண்டு செல்கின்றனர்.

இந்த பூ குறித்து ஏற்காடு பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா எனும் அரசு நிறுவனத்தில் பணிபுரியும் இளங்கோ கூறியதாவது:

இது போல பூவினுள் பல மொட்டுக்கள் உருவாவது மரபியல் திடீர் மாற்றமே காரணம். இது புரளிபிரேஷன் என்றழைக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அதிகளவிலான பனியும் ஒரு காரணமாகிறது.” இவ்வாறு கூறினார்.

 -நவீன் குமார்.