வன்முறையை தூண்டும் அளவிற்கு, வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதும், பிறகு வாங்கிக் கட்டிக் கொள்வதும் சுப்ரமணியன் சுவாமிக்கு அன்றாட வாடிக்கை. அதே போன்ற சம்பவம் இன்று (27.02.2016) உத்திர பிரதேச மாநிலம், கான்பூரில் சுப்ரமணியன் சுவாமிக்கு நேர்ந்துள்ளது.
உத்திர பிரதேசம், கான்பூரில் உள்ள VSSD-கல்லூரியில் (Vikramjit Sinha Sanatan Dharma College) வரலாற்றுத் துறையின் சார்பில் ‘உலகளாவிய பயங்கரவாதம்’ (Global Terrorism) என்ற தலைப்பில் சுப்ரமணியன் சுவாமி தலைமையில் தேசிய கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சென்ற சுப்ரமணியன் சுவாமிக்கு நடுரோட்டில் காரை மறித்து நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
சுப்ரமணியன் சுவாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கறுப்பு கொடி காட்டியதோடு, அவர் கார் மீது முட்டை, கறுப்பு மை, கல் மற்றும் தக்காளிகளை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் இருந்து சுப்ரமணியன் சுவாமியை காவல்துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் மீட்டு பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.