இன்னும் பேரம் படியவில்லை! பேச்சு வார்த்தை முடியவில்லை!

c.kumarDMDK secertaryDMDK secertary2

தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது தே.மு.தி.க-வை இணைத்தே ஆகவேண்டும் என்ற முயற்சியில் மு.கருணாநிதி எடுத்துவரும் முயற்சியை விட, விகடன் குழுமத்தினர்  தொடர்ந்து பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். அதற்காக “ஜீனியர் விகடன்” இதழிலும் மற்றும் விகடன் இணையத்தளத்திலும் எந்தந்த வகையில் எல்லாம் செய்தி வெளியிட முடியுமோ, அத்தனை வழிகளையும் செய்து முடித்து விட்டார்கள். உச்சக்கட்ட செய்தியாக நடிகர் விஜயகாந்த், தி.மு.க. கூட்டணிக்கு போவது உறுதியாகி விட்டது என்றும் செய்தி போட்டு விட்டார்கள்.

இன்னும் பேரம் படியவில்லை, பேச்சு வார்த்தை முடியவில்லை. அதற்குள் நம்மை இப்படி சிக்கலில் மாட்டி விடுகிறார்களே என்று கொதிப்படைந்த தே.மு.தி.க. தலைமை, இந்த நொடி வரையிலும் கேப்டன் யாரிடமும் கூட்டணியைப் பற்றி பேசவே இல்லை என்று, தே.மு.தி.க. கொள்கை பரபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் மூலம் இன்று (05.03.2016) அறிக்கை வெளியிட வைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

இதனால் தி.மு.க. தலைமையும், விகடன் குழுமத்தினரும் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக திகைத்துப்போய் உள்ளனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com