ஏற்காட்டில் வடிகால் கட்டுவதற்காக வெட்டி நீண்ட நாட்களாக மூடப்படாமல் இருந்த குழியில் கார் கவிழ்ந்து விபத்து.
ஏற்காடு டவுண், காந்தி பூங்கா அருகில் வடிகால் அமைப்பதற்காக 50 மீட்டர் தூரத்திற்கு நீண்ட குழி வெட்டப்பட்டு இருந்தது. இதன் அருகில் பொது கிணறு மற்றும் ஏரி இருப்பதால் வடிகால் அமைக்க கூடாது என அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்ட மனு ஒன்று ஏற்காடு உதவி பொறியாளரிடம் வழங்கப்பட்டது. அதனால் அந்த வடிகால் அமைக்கப்படாமலும், குழியும் மூடப்படாமலும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இந்நிலையில் அவ்வழியாக இன்று மதியம் ஏற்காடு, லாங்கில் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் தனது காரில் ஏதோ சத்தம் வந்ததால் காரை அங்கு நிறுத்திவிட்டு, இறங்கி காரின் பின்புறம் சென்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த கார் திடீரென முன்னோக்கி நகர்ந்து வடிகாலுக்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்தது.
இதில் அந்த கார் சிறிதளவு சேதமடைந்தது. எனவே, இந்த குழியினால் மேலும் ஏதேனும் விபத்து ஏற்படுவதற்கு முன்னர் குழியை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
-நவீன் குமார்.