ஏற்காட்டில் உரிமையாளர்கள் இல்லாத சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை!

ye1203P1

பெங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரயர் ரவீந்தரநாத் மற்றும் அவரது மனைவி சேலம் தங்கம் பள்ளியின் முன்னாள் முதல்வருமான டயானா ஆகியோர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்காடு 5 ரோடு பகுதியில் உள்ள லவ்வர்ஸ் லேண் எனும் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

கடந்த 9 ஆம் தேதி ரவீந்தரநாத் தனது பெங்களூருவில் உள்ள சொந்த வீட்டிற்கும், அவரது மனைவி டயானா கேரளாவில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கும் சென்றுள்ளனர். இதனால் அவரது வீட்டிற்கு காவலாக ஏற்காடு, டேங்க் புதூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரை புதிதாக நியமித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் 11 ஆம் தேதி இரவு ரமேஷ் காவல் பணிக்கு வராமல் தனது வீட்டிலேயே தங்கியுள்ளார். இன்று (12.03.2016)  காலை வீட்டிற்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், வீட்டின் உள்ளே சென்று பார்க்கும் போது பீரோ திறக்கப்பட்டு, துணிகள் கீழே சிதறி கிடந்துள்ளதால் வீட்டில் திருட்டு போயுள்ளதை உறுதி செய்து, ரவீந்தரநாத்திற்கு தகவல் கொடுத்து பின்னர் ஏற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சேலம் ஊரக .எஸ்.பி. சுஜித் குமார், ஏற்காடு காவல் ஆய்வாளர் குமரன் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் சோதனையும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகை மாதிரிகளும் எடுத்து செல்லப்பட்டன

வீட்டின் படுக்கயைறையில் கையுறைகள் கிடந்துள்ளதால் திருட வந்தவர் கையுறை அணிந்து கொண்டு திருட்டில் ஈடுப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்

 -நவீன் குமார்.