அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதாவை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், வர்த்தகர்களின் ஒருங்கிணைப்பாளர் R.நாகராஜன், பேரவை துணைத் தலைவர் P.V.கருணாகரன், வட சென்னை மாவட்டத் தலைவர் வியாசை M.மணி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ப.தேவராஜ், தென் சென்னை மாவட்டத் தலைவர் S.செளந்திரராஜன், இணைச் செயலாளர் அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று (14.03.2016) நேரில் சந்தித்தனர்.
வரும் மே மாதம் 16-ம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் ஜெ.ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு தங்களது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, கோரிக்கை மனுவை வழங்கினர்.
-எஸ்.திவ்யா.