அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் படங்களும் இடம் பெறலாம்: உச்ச நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல் இணைப்பு!

sc

Hon'ble Mr. Justice Ranjan Gogoi.

Hon’ble Mr. Justice Ranjan Gogoi.

Hon'ble Mr. Justice Pinaki Chandra Ghose.

Hon’ble Mr. Justice Pinaki Chandra Ghose.

அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும், இதற்காக சில விதிமுறைகளையும் அறிவித்து கடந்த 2015 ஆம் ஆண்டு மே 13-ம்  தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

MAY 13 2015 SC JUDGEMENT01

MAY 13 2015 SC JUDGEMENT02

MAY 13 2015 SC JUDGEMENT03

MAY 13 2015 SC JUDGEMENT04

MAY 13 2015 SC JUDGEMENT05

MAY 13 2015 SC JUDGEMENT06

MAY 13 2015 SC JUDGEMENT07

MAY 13 2015 SC JUDGEMENT08

MAY 13 2015 SC JUDGEMENT09

MAY 13 2015 SC JUDGEMENT10

MAY 13 2015 SC JUDGEMENT11

MAY 13 2015 SC JUDGEMENT12

MAY 13 2015 SC JUDGEMENT13

MAY 13 2015 SC JUDGEMENT14

MAY 13 2015 SC JUDGEMENT15

MAY 13 2015 SC JUDGEMENT16

MAY 13 2015 SC JUDGEMENT17

MAY 13 2015 SC JUDGEMENT18

MAY 13 2015 SC JUDGEMENT19

MAY 13 2015 SC JUDGEMENT20

MAY 13 2015 SC JUDGEMENT21

MAY 13 2015 SC JUDGEMENT22

MAY 13 2015 SC JUDGEMENT23

MAY 13 2015 SC JUDGEMENT24

MAY 13 2015 SC JUDGEMENT25

MAY 13 2015 SC JUDGEMENT26

MAY 13 2015 SC JUDGEMENT27

MAY 13 2015 SC JUDGEMENT28

MAY 13 2015 SC JUDGEMENT29

MAY 13 2015 SC JUDGEMENT30

MAY 13 2015 SC JUDGEMENT31

MAY 13 2015 SC JUDGEMENT32

MAY 13 2015 SC JUDGEMENT33

இதை எதிர்த்து தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் படம் இடம்பெறவும் அனுமதி அளிக்குமாறு கோரப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பி.சி.கோஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்து வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, அரசு விளம்பரங்களில் ஆளுநர் மற்றும் முதல்வர் படங்கள் இடம்பெற தடை விதிப்பது தவறானது. அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை தெரிந்துகொள்வது மக்களின் அடிப்படை உரிமை. இந்த விஷயத்தில் தேவையற்ற தடைகளை விதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.

SCO SCO2SCO3

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று (18.03.2016) தீர்ப்பளித்த நீதிபதிகள், அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் படங்களும் இடம் பெறலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே, அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை ஆகியோரின் படங்களுக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. தற்போது, தன்னுடைய முந்தைய உத்தரவை மாற்றி அமைத்துள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com