மாடு விற்பனை செய்ய சென்ற இரண்டு வியாபாரிகள் மரத்தில் தொங்கவிட்டு கொலை! -ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த கொடுமை!

Jharkhand murder2 Jharkhand murder Jharkhand murder 1

ஜார்க்கண்ட் மாநிலம், லதேகர் மாவட்டம், ஹெர்கத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த முஹமது மஜ்லூம் (வயது35), ஆசாத் கான் (வயது 15) ஆகிய வியாபாரிகள் விற்பனைக்காக 8 எருமை மாடுகளை சந்தைக்கு கொண்டு சென்றனர்.

மறுநாள் அவர்கள் இருவரும் ஜாபார் என்ற கிராமத்தில் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு, வாய் துணி வைத்து அடைக்கபட்ட நிலையில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கவிடபட்டு இருந்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சம்பவ இடத்தில் மாடுகள் எதுவும் இல்லை. எனவே, வியாபார தகராறில் கொலை நடந்ததா அல்லது மாடு திருடும் கும்பல் இந்த கொலை செய்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

-எஸ்.சதிஸ் சர்மா.