டெல்லி அலிபூர் சாலையில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தேசிய நினைவு இல்லத்துக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று (21.03.2016) நடந்தது.
பிரதமர் நரேந்திர மோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:–
பி.ஆர்.அம்பேத்கர் நினைவு மையம் 2018–ம் ஆண்டு ஏப்ரலில் திறந்து வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் நாட்டில் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். மக்களுக்குள் இருந்த உன்னத சக்தியை வெளிக்கொண்டு வந்தவர். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முன்னேற்றமே அம்பேத்கரின் லட்சியமாக இருந்தது.
மார்ட்டின் லூதர்கிங்குக்கு இணையான உலக தலைவர் டாக்டர் அம்பேத்கர். சமூக மாற்றத்துக்காக அவர் வகுத்து தந்த பாதையை பின்பற்றுவதே நமது கடமையாகும்.
தலித் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக இட ஒதுக்கீட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. இடஒதுக்கீடு தொடர்பாக எதிர்கட்சிகள் பரப்பி வரும் தகவலில் உண்மை இல்லை. அரசியல் காரணங்களுக்காக அப்படி செய்கின்றன. பாரதீய ஜனதா அரசு இட ஒதுக்கீட்டு முறைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.