தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளர் யுவராஜ், தி.மு.க.வில் இணைந்தார்!

dmk news dmk news 1

தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜ், இன்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

இந்நிலையில் வடசென்னை மாவட்டத்துக்கு புதிய பொறுப்பாளரை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நியமித்துள்ளார்.

தே.மு.தி.க.வில் இருந்து இன்னும் பல முக்கிய பிரமுகர்களை தி.மு.க.விற்கு கொண்டு வருவதற்கு திரை மறைவில் பல்வேறு பேரங்கள்  நடைப்பெற்று வருகிறது. அதற்கு பதிலடி கொடுப்பதற்கும் தே.மு.தி.க. தயாராகி வருகிறது.

-கே.பி.சுகுமார்.