சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் இலங்கையில் கைது!  

SL NEWS2SL NEWS 3SL NEWS5SL NEWSSL NEWS A

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 101 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் இலங்கை தென் கடற்பரப்பில் கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 11 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

101 கிலோ ஹெரோயின், கப்பலுடன் நேற்று இரவு கொழும்பு துறை முகத்துக்கு கொண்டுவரப்பட்டது. 100 கோடி ரூபா ஹெரோயினும் சந்தேக நபர்களும் தற்சமயம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ந்த கப்பல் கொழும்பு துறை முகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன.

இந்தப் போதைப் பொருளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறிய கப்பல், இரானியர்களுக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது

கொழும்பின் புறநகர் பகுதியான நீர்கொழும்பில் தங்கியிருந்த கும்பலே, இந்தக் கடத்தலுக்கான திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் தெரிகிறது. மடக்கிப் பிடிக்கப்பட்ட அந்தக் கப்பலில் இருந்து 101 கிலோ கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனைக் கடத்த முற்பட்டவர்கள் பத்து இரானியர்களும், பாகிஸ்தானியர் ஒருவருமாக 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-எஸ்.சதிஸ் சர்மா.