தமிழக ஆளுநர் ரோசையா வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–
தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கும் மக்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த புத்தாண்டு அமைதி, ஒற்றுமை வளர்ச்சியை மேம்படுத்தட்டும். இந்தியாவை உயர்வு நிலைக்கு கொண்டு செல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக ஆளுநர் ரோசையா தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-கே.பி.சுகுமார்.