மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி!

image 001திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம கல்விகுழுத் தலைவர் காந்தி சின்னக்குழந்தை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணு பிள்ளை மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மீனா சினிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பாக நடைபெற்ற பேரணியை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம கல்விகுழுத் தலைவர் காந்தி சின்னக்குழந்தை தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதி ராஜ வீதி, காமாட்சியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு வழியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது. மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தப்பட்டது. பின்னர் பேரணியை நிறைவு செய்தனர்.

பேரணியில் பள்ளி ஆசிரியர்கள் த.சங்கீதா, கு.தனலெட்சுமி, ச.நாராயணன், பூ.ஜோதி,  க.அரசு, பி.அமலிஜெரினா, ரேகா, மகேஸ்வரி, ச.ஆறுமுகம், ர.ராஜா ஆகியோர் சென்றனர்.

முடிவில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சா.வேல்முருகன் நன்றி கூறினார்.

– செங்கம் மா.சரவணக்குமார்.