இந்த தேர்தலிலாவது தி.மு.க.வில் இணைந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மு.க. அழகிரி அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
தன் தந்தை மு.கருணாநிதியை தவறாக பேசிய வைகோவிற்கு கண்டனம் தெரிவித்தார். வைகோவின் உருவபொம்மையை கொளுத்த தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். பயந்துப்போன வைகோ 12 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
‘தி.மு.க. திருடர்கள் கட்சி’ என்று பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்திற்கு எதிராக மு.க. அழகிரி கொதித்து எழுந்தார்.
தே.மு.தி.க- தி.மு.க.கூட்டணியில் சேரவில்லை என்று தெரிந்தவுடன், தனது தந்தை மு.கருணாநிதியை இரண்டு முறை நேரில் சந்தித்தார்.
இதை மு.க. அழகிரி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.
தந்தையை பார்க்க வந்திருக்கிறார். இதில் அரசியல் ஒன்றும் இல்லை என்று, மு.க.ஸ்டாலின் அலட்சியமாக பேசி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தி.மு.க. வேட்பாளர் பட்டியலிலாவது தமது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று மு.க. அழகிரி பொறுமையாக காத்திருந்தார். ஆனால், அதிலும் புறக்கணிக்கப்பட்டார். இதனால் விரக்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
இந்நிலையில் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று மு.க. அழகிரியை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம், சட்டமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி, வருகிற சட்டமன்ற தேர்தலில் எனது ஆதரவு யாருக்கும் கிடையாது. இது என் ஆதரவாளருக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com