நமீதாவாகிய நான் தமிழ் திரைத்துறையில் தங்களது ஆசிகளுடன் நடிகையாக இருந்து வருகிறேன். தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக உயர வைத்துள்ளது.
உலகின் ஒப்புயர்வற்ற இரும்புப் பெண்மணியாக, சிறந்த தலைவியாகத் திகழும் தங்களின் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பை தர விரும்புகிறேன்.
தங்கள் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக என்னை சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று, கடந்த மார்ச் 30–ந்தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு, நடிகை நமீதா கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இன்று (23.04.2016) மாலை திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க பிரசார பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா முன்னிலையில், நடிகை நமீதா தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக்கொண்டார்.
-ஆர்.மார்ஷல்.